மருத்துவ நிபுணர்கள் என்ற வகையில், மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் குணமடைதலுக்கு எளிதான செயல்முறையை வழங்குவதையே நீங்கள் நோக்கமாகக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும், நோயாளிகளும் அவர்களுக்குத் துணையாக வருவோரும், பெரும்பாலும் பேமெண்ட் செலுத்தும் முறையை சலிப்பூட்டும் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தும் பணியாகவே நினைக்கிறார்கள். இப்போது, ஸ்மார்ட்ஹப் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் கிளினிக்குகளுடன் உங்கள் நோயாளிகளுக்கு ஒரு எளிதான பேமெண்ட் முறையை நீங்கள் வழங்க முடியும்.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட பேமெண்ட் அமைப்பை ஸ்மார்ட்ஹப் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் கிளினிக்குகள் வழங்குகிறது. இது வசதியான, திறமையானது மற்றும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட் சேனல்கள் மூலம் பேமெண்ட் பெறும் செயல்முறைகளை செயலி மற்றும் பி.ஓ.எஸ் முனையங்கள் எளிதாக்குகின்றன.
ஸ்மார்ட்ஹப் ஹெல்த்கேர் என்பது ஒரு தனித்துவமான கிளினிக் மற்றும் மருத்துவமனை பேமெண்ட் அமைப்பாகும். இது உங்கள் கிளினிக் அல்லது உங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் உங்கள் நிர்வாகிகளுக்கு பேமெண்ட் செலுத்துதல் மற்றும் வசூலித்தல் செயல்முறைகளை எளிதாக்குகிறது.
ஸ்மார்ட்ஹப் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நோயாளிகளுக்கு பல்வேறு பேமெண்ட் தளங்களை வழங்குகிறது. நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், டிஜிபி.ஓ.எஸ் அல்லது ஸ்வைப் மெஷின் வழியாக அலுவலகத்தில் பேமெண்ட் செலுத்துதல், வயர்லெஸ் கார்டு ஸ்வைப் மெஷின்கள் (ஜி.பி.ஆர்.எஸ்) மற்றும் மொபைல் கார்டு ஸ்வைப் மெஷின்கள் (எம்.பி.ஓ.எஸ்) மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் பேஸாப் ஆப், யூ.பி.ஐ மற்றும் க்யூ.ஆர் கோடுகள் ஆகியவற்றின் வழியாக தீர்வுகள்.
இது உங்கள் பேமெண்ட் வசூல் முறையை மேம்படுத்துகிறது, மேலும் மனிதவளம், நேரம் மற்றும் அலுவலக இடத்திற்கான உங்கள் வருவாய் மற்றும் செலவு சுழற்சி செயல்முறைகள் சிறப்பாக செய்யப்படுகின்றன
இந்த மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் செலுத்தும் முறையின் பி.ஓ.எஸ் நிகழ்நேரத்தில் செயல்படுகிறது, பணம் செலுத்துவதற்கும் / வசூலிப்பதற்கும் மற்றும் மருத்துவரின் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதற்கும் அல்லது மறுபரிசீலனை செய்வதற்கும் இது பயன்படுகிறது.
இது விரைவான பண பரிவர்த்தனைகளுக்கு உதவுகிறது, மருத்துவமனைகளில் நீண்ட, வரிசைகளைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் விரைவாக நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யவும் உதவுகிறது. கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு இது கணிசமான அளவு பணிச்சுமையை குறைக்கிறது.