தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான பணம் செலுத்தல் தீர்வுகள்

தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டுக் கட்டண பேமெண்ட்

பில் கட்டுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பது, அதிக அளவு பணப் புழக்கம் என ஒரு காலம் இருந்தது இது வார இறுதிகளை தியாகம் செய்வது என்று அர்த்தமாகும். ஆனால் அந்த நாட்கள் கடந்து போய்விட்டன! ஸ்மார்ட்ஹப் உடன் தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவை வழங்குநர்கள் விரைவாக பேமெண்ட் வசூலிக்கலாம்.

பயன்பாட்டு பில் வசூல் முகவர்கள் மற்றும் தொலைதொடர்பு சேவை வழங்குநர்களுக்கான ஸ்மார்ட்ஹப் தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாடுகள் தீர்வு ஒரு பிரத்யேகமான பணம் செலுத்தல் தீர்வாகும். பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் நீங்கள் பணம் வசூலிக்கலாம்.

அம்சங்கள்

  1. ரொக்கம் மற்றும் காசோலைகளைக் கையாள்வதைக் குறைத்தல் : தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான பேமெண்ட் தீர்வுடன், கார்டுகள், க்யூ.ஆர் குறியீடுகள், யூ.பி.ஐ, இ-வாலட்டுகள் போன்ற பல முறைகளில் தொடர்பில்லா பேமெண்ட் செலுத்தலை வாடிக்கையாளர்கள் உபயோகிக்க முடியும்.
  2. பில் கட்டண விழிப்பூட்டல்கள் மற்றும் அறிவிப்புகளை அனுப்புதல்: தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்புகள் அம்சம் மூலம், உரிய தேதிக்கு முன் பில்களை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பலாம்.
  3. வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்களை வழங்க அனுமதித்தல்:தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பேமெண்டைத் தவறாமல் செலுத்துவதற்கு வசதியாக ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்களை வழங்க அனுமதிக்கிறது.

நன்மைகள்

  • தொலைத் தொடர்பு, மின்சாரம், டி.டி.எச் மற்றும் பிற பயன்பாட்டு பில்களுக்கான திறமையான பணம் செலுத்தல் தீர்வு
  • எச்.டி.எஃப்.சி வங்கி பேஸாப் வாலெட் மூலம் நொடியில் ரீசார்ஜ் செய்வதற்கான வசதி
  • பணம் மற்றும் காசோலைகளை ஏற்கத் தேவையில்லை
  • பணம் மற்றும் காசோலைகளை தவற விட வாய்ப்பு இல்லை.
  • குறைந்தபட்ச காலங்கடந்த பேமெண்ட் சிக்கல்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எந்த வகையான பயன்பாட்டு பில்களை ஸ்மார்ட்ஹப் ஆதரிக்கிறது?

ஸ்மார்ட்ஹப்புடன், மின்சாரம், எரிவாயு, நீர் மற்றும் லேண்ட்லைன் மற்றும் மொபைல் பில்களுக்கான கட்டணங்களை தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு சேவை வழங்குநர்கள் ஏற்க முடியும்.

ஸ்மார்ட்ஹப் தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான பேமெண்ட் தீர்வு முறைகள் யாவை?

ஸ்மார்ட்ஹப் டெலிகாம் மற்றும் பயன்பாடு உங்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட் முறைகளை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. நெட்பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டுகள், பேஸாப், யூ.பி.ஐ, அல்லது க்யூ.ஆர் குறியீடுகள் ஆகியவையும் உள்ளடங்கும். எஸ்.எம்.எஸ் மூலம் பணம் செலுத்தும் இணைப்புகளை நீங்கள் பகிரலாம் அல்லது டிஜி.பி.ஓக்கள் அல்லது பி.ஓ.எஸ் இயந்திரம், வயர்லெஸ் கார்டு ஸ்வைப் இயந்திரம் (ஜி.பி.ஆர். எஸ்) மற்றும் மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரம் (எம்.பி.ஓ.எஸ் ) போன்ற கட்டண முனையங்களைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்ஹப் தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான பேமெண்ட் தீர்வை சேவை வழங்குநர்கள் தனிப்பயனாக்க முடியுமா?

ஆம், சேவை வழங்குநர்கள் தங்கள் வணிகத்திற்காக ஸ்மார்ட்ஹப் ஆப்-ஐ தனிப்பயனாக்கலாம். உதாரணமாக, மொபைல் பில் பேமெண்ட்களை நீங்கள் பெற்றால், உங்கள் தொலைத் தொடர்பு பங்குதாரரின்படி டாஷ்போர்டு காட்சியை தனிப்பயனாக்கலாம்.

ஸ்மார்ட்ஹப் தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான பேமெண்ட் தீர்வில் பில்கள் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன?

பல நுழைவாயில்கள் வழியாக செய்யப்பட்ட பேமெண்ட்களை பயன்பாட்டு நிறுவனங்கள் பெறலாம். இந்த பேமெண்ட்கள் நிகழ்நேரத்தில் செயலாக்கப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியான பரிவர்த்தனையை உறுதி செய்கிறது.

பில் செலுத்தல் குறித்த அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகின்றன

ஸ்மார்ட்ஹப் டெலிகாம் மற்றும் பயன்பாடு மூலம், வாடிக்கையாளர்கள் சேவை வழங்குநர் மற்றும் வங்கி ஆகியவை அனுப்பும் எஸ்.எம்.எஸ் எச்சரிக்கைகள் மூலம் டிஜிட்டல் கட்டண ரசீதுகளைப் பெறலாம்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்