மருந்துப்பொருட்கள் துறைக்கான பணம் செலுத்தல் தீர்வு

கெமிஸ்ட்களுக்கான பேமெண்ட் ஏற்றுக்கொள்ளும் தளம் எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் பார்மாவுக்கு வரவேற்கிறோம். ஸ்மார்ட்ஹப் பார்மா மூலம் உங்கள் மருந்தகத்தை டிஜிட்டல் மயமாக்கி உங்கள் வணிகத்திற்கு புது உருவம் வழங்கலாம்.

ஸ்மார்ட்ஹப் பார்மாவின் எட்டு சிறப்பம்சங்கள்:

  1. அனைத்து பேமெண்ட்களுக்கும், ஒருஸ்வைப் இயந்திரம் அல்லது ஆப்: கார்டுகள், யூ.பி.ஐ, வாலட், க்யூ.ஆர் வழியாக பணம் வசூலிக்கவும். செலுத்த வேண்டிய தொகையை நேரடியாக உங்கள் சாதனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு அறிவியுங்கள்.
  2. மருந்துகள் காலாவதியானதால் ஏற்படும் இழப்பைத் தவிர்த்தல்: மருந்து காலாவதி தேதியை நெருங்கும்போது தானியங்கு எச்சரிக்கைகளைப் பெறுங்கள். அவற்றை முதலில் விற்று இழப்புகளைத் தவிருங்கள்.
  3. இருப்பில் இல்லா தயாரிப்புகளினால் ஏற்படும் இழப்பைத் தவிர்த்தல்: இருப்பு குறைவாக இருக்கும்போது அல்லது மறுஆர்டர் தேவைப்படும்போது விழிப்பூட்டல் பெறுங்கள்.
  4. ஆன்லைனில் சரக்கு ஆர்டர் சமர்பித்தல்: ஸ்மார்ட்ஹப் பார்மா தளத்திலிந்து உங்கள் விருப்பமான விற்பனையாளர்/விநியோகஸ்தருடன் ஆன்லைனில் ஆர்டர்களை சமர்ப்பியுங்கள்.
  5. வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல் அனுப்புதல்: அடிக்கடி வாங்கும் வாடிக்கையாளர் ஆர்டர்களுக்கு மருந்து குறித்த நினைவூட்டல்களை அனுப்புங்கள்.
  6. வாடிக்கையாளர் விசுவாசத்தை அதிகரித்தல்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சலுகைகளை உருவாக்கி எஸ்.எம்.எஸ் அல்லது ஆப் மூலம் அவர்களுக்குப் பகிருங்கள்.
  7. நிகழ்நேர தகவல்களைப் பெறுங்கள்: கடையின் தனிப்பட்ட டாஷ்போர்டை உருவாக்குங்கள் மற்றும் இவற்றிற்கு நிகழ்நேர சுருக்க அறிக்கைகளை உருவாக்குங்கள்:
    • விற்பனை
    • சரக்குகிருப்பு
    • வாடிக்கையாளர் மேலாண்மை
    • பணப்புழக்கம்
    • வாங்குதல்
  8. கூடுதல் சேமிப்புகளைப் பெறுங்கள்: ஆப்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி போனஸ் நாணயங்களைப் பெறுங்கள். வாடிக்கையாளர் சலுகைகளை உருவாக்க நாணயங்களைப் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்

  • ஒரு முறை வாடிக்கையாளர்களை தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள்
  • எப்போதும் கடையின் சரக்கிருப்பு பற்றிய விழிப்புணர்வு
  • துரித ஆர்டர் மற்றும் விரைவான விற்பனை
  • அனைத்து பணம் செலுத்தல்கள் மற்றும் கடை மேலாண்மைக்கு ஒரே சாதனம்
  • உங்கள் வாடிக்கையாளர்களின் கொள்முதல் பாணியைப் புரிந்துகொள்வதன் மூலம் சரியான பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளை சரியான அளவில் இருப்பு வைத்து உங்கள் லாபத்தை அதிகரியுங்கள்.-

ஸ்மார்ட்ஹப் தீர்வுகளை எவ்வாறு பெறுவது?

பார்மா துறைக்கான ஸ்மார்ட்ஹப் பணம் செலுத்தல் தீர்வைப் பெற, இங்கே கிளிக் செய்க.

எச்.டி.எஃப்.சி ஸ்மார்ட்ஹப் பார்மசி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வாடிக்கையாளர் எந்தெந்த முறைகளில் பணம் செலுத்தலாம்?

டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், யூ.பி.ஐ மற்றும் க்யூ. ஆர் கோடுகள் மூலம் பேமெண்ட்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

ஸ்மார்ட்ஹப் பார்மாவை எவ்வாறு உபயோகிப்பது?

நீங்கள் ஒரு பிசி/மடிக்கணினி/ ஆண்ட்ராய்டு டேப்லெட் உடன் ஸ்மார்ட்ஹப் பி.ஓ.எஸ் முனையத்தை இணைக்கலாம், அல்லது உங்கள் மொபைலில் ஆப்-ஐ பதிவிறக்கலாம்.

உரிமையாளருக்கு எவ்வகையான அறிக்கைகள் கிடைக்கின்றன?

பின்வரும் அறிக்கைகள் உரிமையாளருக்கு கிடைக்கின்றன

  • விற்பனை அறிக்கைகள் - பேமெண்ட் முறை வாரியாக
  • விற்பனை அறிக்கைகள் - தயாரிப்பு - வாரியாக
  • கொள்முதல் அறிக்கைகள்
  • கொள்முதல் அறிக்கைகள் - தயாரிப்பு-வாரியாக
  • தயாரிப்பு மாஸ்டர்ஸ், வாடிக்கையாளர் மாஸ்டர்ஸ் மற்றும் சப்ளையர் மாஸ்டர்ஸ் பற்றிய அறிக்கைகள்
ஏன் ஸ்மார்ட்ஹப் பார்மாவை உபயோகிக்க வேண்டும்?

ஒரு கெமிஸ்டாக, மருந்துகள் மற்றும் மறு ஆர்டர் ஸ்டாக்ஸ் குறித்த காலாவதி தேதிகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்மார்ட்ஹப் பார்மாவுடன், நீங்கள் மருந்துகள் மற்றும் மேலும் பலவற்றுக்காக ஒரே இடத்தில் ஸ்டாக் மேலாண்மை மற்றும் பேமெண்ட் தீர்வுகளை பெறுவீர்கள்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்