லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஹோம் டெலிவரி வணிக அமைப்புகளுக்கான பேமெண்ட் தீர்வு

ஹோம் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ்

ஷாப்பிங் செய்யும் முறையை ஹோம் டெலிவரி முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஹாப்பிங் செய்து இல்லத்திலேயே டெலிவரி பெற முடியும். தற்போதைய இப்போக்குகள் மற்றும் தொடரும் கோரிக்கைகளை நிறைவேற்ற, வலுவான லாஜிஸ்டிக்ஸ் அமைப்பு இருப்பதும் அவசியம். தயாரிப்புகளை டெலிவரி செய்து பேமெண்ட் பெறும் பல கடைகளின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஹோம் டெலிவரி சார்ந்து ஒரு முறையான பேமெண்ட் தீர்வையும் வைத்திருப்பது அவசியம்.

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஹோம் டெலிவரிக்கான ஸ்மார்ட்ஹப் தீர்வு உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதன் ஹோம் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ்கிற்கான ஒருங்கிணைந்த பேமெண்ட் தீர்வுகள் உங்கள் செயல்முறைகளை எளிதாக்குகின்றன.

அம்சங்கள்:

  1. பலவகை பேமெண்ட் தேர்வுகள்: யூ.பி.ஐ, பாரத் க்யூ.ஆர், கார்டுகள், பேஸாப் அல்லது மல்டிபேங்க் நெட்பேங்கிங் போன்ற பேமெண்ட் தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உடனடி பேமெண்ட் உறுதிப்படுத்துதல் தகவல்களைப் பெறுங்கள்.
  2. தடையற்ற ஒருங்கிணைவு: உங்கள் வணிகத்தின் தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்ஹப் ஹோம் டெலிவரி அண்டு லாஜிஸ்டிக்ஸ்சுடன் உங்கள் தற்போதைய பில்லிங் முறையை ஒருங்கிணையுங்கள்.
  3. குறைந்தபட்ச பண மேலாண்மை: எஸ்.எம்.எஸ் அல்லது இமெயில் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் இணைப்பு மூலம் மொத்தமாக அல்லது ஒற்றை பரிவர்த்தனைகளில் பேமெண்ட் வசூலியுங்கள்.
  4. நவீன டாஷ்போர்ட்: எளிதான பதிவிறக்க வசதியுடன் அனைத்து கணக்கிணக்கம் செய்யப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள பேமெண்ட்களின் விரிவான பார்வை.
  5. தொலைவிலிருந்து பேமெண்ட் பெறுதல்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, இடரற்ற மற்றும் பணமில்லா பேமெண்ட் தேர்வுகளை வழங்குங்கள்.
  6. வசூல் செலவில் சேமிப்பு: ஹோம் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ்கிற்கான இந்த பேமெண்ட் தீர்வு மூலம், நிலுவைத் தொகை சார்ந்து அனுப்பப்படும் பல நினைவூட்டல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் வசூல் வருகைகள் மீதாக செலவுகளைக் குறையுங்கள். இதன் மூலம் ஒரு நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்-ஐ ஒரு செயலில் உள்ள பேமெண்ட் இணைப்பாக மேம்படுத்த முடியும். செலுத்த வேண்டிய தொகையை ஒரு விலைப்பட்டியல் மூலம் நீங்கள் இணைக்கலாம்.
  7. நிகழ்நேர பேமெண்ட் நிலை: ஸ்மார்ட்ஹப் ஹோம் டெலிவரி தீர்வு மூலம் பேமெண்ட் உறுதிப்படுத்தல் தகவல் உடனடியாகப் பெறப்படுகிறது. உங்களோடு சேர்ந்து, உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோக நிர்வாகியும் எஸ்.எம்.எஸ் அல்லது இமெயில் வழியாக உடனடி உறுதிப்படுத்தல் எச்சரிக்கையைப் பெறுவார்கள்.

நன்மைகள்:

  • எந்த நேரத்திலும் எந்த பேமெண்ட் முறையிலிருந்தும் தொலைவில் இருந்து பேமெண்ட் வசூல் செய்யுங்கள்
  • உங்கள் வணிகத்திற்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட பேமெண்ட் தீர்வைப் பெறுங்கள்.
  • உங்கள் கடையின் பரிவர்த்தனைகளை ஒரு தனித்துவமான மற்றும் மேம்பட்ட டாஷ்போர்டில் நிகழ் நேரத்தில் கண்காணியுங்கள்.
  • விரல் நுனியில் எவ்வித சிறப்பு முயற்சியுமின்றி எளிதாகப் பெறும் முறை.

ஸ்மார்ட்ஹப் ஹோம் டெலிவரியைப் பெறுங்கள் உங்கள் ஒவ்வொரு முக்கியமான தேவையையும் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட உங்கள் வணிகத்திற்கான ரொக்கமில்லா பண வசூலிப்பு. வணிகத்தை வளர்க்க உங்களுக்கு நாங்கள் துணையிருப்போம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஹோம் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வணிகங்களுக்கு பேமெண்ட் வசூலிக்கும் தளம் எவ்விதத்தில் துணை புரிகிறது?

எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் இணைப்பு மூலம் எந்த நேரத்திலும் உங்கள் வாடிக்கையாளர்கள் தொலைதூரத்திலிருந்து பேமெண்ட் செலுத்த இது ஒரு விரைவான அமைப்பாகும்.

ஹோம் டெலிவரி வணிகத்திற்கான பேமெண்ட் தீர்வின் நன்மைகள் என்ன?
  • இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வீட்டு விநியோகத்திற்கான நேரடியான மற்றும் சிரமமின்றி பணம் வசூலிக்கும் தளமாகும்.
  • இது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், யூ.பி.ஐ, பாரத் க்யூ. ஆர், பேஸாப், பலவகை வங்கி நெட்பேங்கிங் போன்ற மாறுபட்ட பண செலுத்தல் முறைகளை வழங்குகிறது
  • உடனடி பேமெண்ட் உறுதிப்படுத்தல் பெறப்படும்
ஸ்மார்ட்ஹப் ஹோம் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பேமெண்ட் கலெக்க்ஷன் தீர்வின் அம்சங்கள் யாவை?
  • எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயிலில் லிங்க்கை அனுப்புவதன் மூலம் தொலைதூரத்தில் இருந்து பணத்தை வசூலிக்கலாம்.
  • பல முறைகள் மூலம் உடனடி பண வசூல் நிலைகளைப் பெறுங்கள்
  • நிகழ்நேர கட்டண நிலை.
  • நிலுவைகளைக் கண்காணிக்கவும் பூர்த்தி செய்யப்பட்ட பேமெண்ட்களை முடிக்கவும் விரிவான டாஷ்போர்டு
  • வசதியான அறிக்கை பதிவிறக்க வசதி
  • பாதுகாப்பான தளம் மூலம் தடையற்ற ஒருங்கிணைப்பு.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்