வலைப்பதிவு

வணிகக் கணக்கிணக்கச் சவால்களை சமாளிப்பது எப்படி?

வணிகக் கணக்கிணக்கம்

மும்பையிலுள்ள போர்விலியில் பவேஷ் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வருகிறார், பொதுவாக ரொக்கப் பணமாக பணம் செலுத்தலை ஏற்கிறார். இக்காலகட்டத்தில், பெருமளவு வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளார் மற்றும் பொருள்களை கடன் அடிப்படையில் வழங்குகிறார். நிதி நெருக்கடிக்குப் பிறகு, நிலுவையிலுள்ள பணம் செலுத்தலை கணக்கிடுவதில் மிகவும் கஷ்டப்படுகிறார். அவரது ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் ரீஃபண்ட்கள், திரும்பி வரும் பொருட்கள், தள்ளுபடிகள், தவறான பில்லிங் மற்றும் பெற்ற தொகை ஆகியவற்றைக் கண்காணித்தல் ஆகியவை கடந்த சில மாதங்களாக சவாலாக உள்ளது. வாடிக்கையாளர்களை பொண் மூலம் தொடர்புகொள்வது கூட குறைந்துள்ளது. பணச் சுழற்சியில் உள்ள இடைவெளி காரணமாக, சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்ட முறை குறித்து வாதிடுவது நிலைமையை மேலும் மோசமாக்கியது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது அன்றாட புக் கீப்பிங் முறையில் தவறு நேர்ந்து அதனால் இழப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என பவேஷ் கருதுகிறார்.

தவறான கணக்கிணக்கம் காரணமாக பணபுழக்கச் சிக்கல்கள் பல சிறிய வணிகங்களின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. சில கடைகள் கார்டுகளையும் டிஜிட்டல் பணம் செலுத்தல்களையும் ஏற்கத் தொடங்கியிருந்தாலும், ரீஃபண்ட் மேலாண்மை சவாலாகவே உள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் மூலம் டிஜிட்டல் தீர்வு எச்.டி.எஃப்.சி வங்கியின் புதிய தலைமுறை டிஜிட்டல் பேமெண்ட் மேலாண்மை கருவியான ஸ்மார்ட்ஹப், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிற வணிகங்கள் தங்கள் பில்லிங், கடன் மேலாண்மை, தானியங்கு பில்லிங் மற்றும் நாள் இறுதி கணக்கிணக்கம் போன்றவற்றை தொழில்நுட்பத்தின் செயல்திறன் உதவியோடு சீராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை அமைப்புச் செயல்முறையை மேற்கொள்வது மட்டுமே போதுமானது.

ஸ்மார்ட்ஹப்-ஆல் எவ்வாறு அன்றாட வசூல்களைக் கணக்கிடுவதை எளிதாக்கி, உங்கள் கணக்கிணக்கச் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனப் பார்ப்போம்.

தனிப்பட்ட பதிவுகளைப் பராமரிப்பது மற்றும் புதுப்பிப்பது ஒரு வணிக உரிமையாளராக, கையிருப்பு ஆர்டர் செய்வது முதல் வருமான வரி தாக்கல் செய்யும் வரை அனைத்திற்கும் துல்லியமான ரெக்கார்டு கீப்பிங் பராமரிப்பு அவசியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். கொரோனர வைரஸ் தொற்றுநோய் தாக்கம் தொடங்கியதில் இருந்து, குறைந்த வேலை நேரம் மற்றும் கடையில் அதிக நெரிசல் காரணமாக பில்களைக் கண்காணிப்பது சவாலாக உள்ளது. ஆனால் ஸ்மார்ட்ஹப்புடன், நீங்கள் இப்போது ஒவ்வொரு விற்பனையையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து புதுப்பிக்கலாம் மற்றும் அன்றைய நாளின் முடிவில் கணக்கிணக்கத்திற்கான துல்லியமான தரவை உருவாக்கலாம். இது தனிப்பட்ட மாதாந்திர நிலுவைகளைக் கணக்கிடுவதில் நீங்கள் செலவிடும் நேரத்தையும், முயற்சியையும் கணிசமாகக் குறைத்து சீரான பில்லிங் செயல்முறையை உறுதி செய்யும்.

அனைத்து வகையான பேமெண்டுகளையும் நிர்வகியுங்கள்தற்போது ரொக்கப் பணப் பரிமாற்றத்தை தவிர்த்து வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணம் செலுத்தல் முறைக்கு மாறியுள்ள சூழல் நிலவுகிறது. உண்மையில், பணமதிப்பிழப்புக்குப் பிறகு சில்லறை விற்பனையில் டிஜிட்டல் பணம் செலுத்தல் உபயோக அளவு தற்போது உயர் மட்டத்தில் உள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்புடன், பல பாதுகாப்பான முறைகள் மற்றும் சில விநாடிகளில் முழுமையான பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம். ஸ்கேன் அண்டு பே, டேப் அண்டு பே (மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரம் பி.ஓ.எஸ்), வயர்லெஸ் கார்டு ஸ்வைப், ஆன்லைன் பணம் செலுத்தல் (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங்) மற்றும் யூ.பி.ஐ (பேஸாப்) ஆகியவற்றை இது அனுமதிக்கிறது.

எளிதான விலைப்பட்டியல் கண்காணிப்பு தவணை தேதிகள் மற்றும் ஒரு நிலுவையில் உள்ள தொகைகளை ஒரு பதிவேட்டில் எழுதிவைப்பது, கணக்கீட்டுப் பிழைகள் அல்லது கவனக் குறைவுக்கு வழிவகுக்கும். எனவே, எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் போன்ற டிஜிட்டல் தளத்திற்கு மாறி விரைவான உறுதிப்படுத்துதலை உறுதி செய்ய விலைப்பட்டியல் கண்காணிப்பை எளிதாக, விரைவாக, சிரமமற்றதாக மாற்றுங்கள்.

தவிர, விலைப்பட்டியல்களிலிருந்து பேமெண்ட்டின் மூலத்தை அடையாளம் காண அதிக நேரம் எடுப்பதோடு மற்றும் கடை ஊழியர்களின் தரப்பில் நிறைய முயற்சி தேவைப்படலாம். ஸ்மார்ட்ஹப் மூலம், தொடர்புடைய விலைப்பட்டியலுடன் மூலத்தை எளிதாக இணைத்து நேரத்தையும் முயற்சியையும் சேமிக்கலாம்.

தொடர் பேமெண்ட்களின் தானியங்கு வசூல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், நல்லெண்ணத்தைப் பெறுவதற்கும், கடன் முறையில் பொருட்களை வழங்குவது ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வழக்கமான வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிப்பது சிரமமான பணியாக இருக்கலாம், இது சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், வணிகத்தில் பெரும் இழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்புடன் போன்ற டிஜிட்டல் தீர்வுகள், நிலுவையில் உள்ள அனைத்து பேமெண்ட்களையும் காண ஒரு ஒருங்கிணைந்த பார்வையை வழங்குகின்றன, இது வசூலிக்கும் பணியை மிகவும் எளிதாக்குகிறது.

விலைப்பட்டியல் அடிப்படையிலான பணம் செலுத்தல் இணைப்புகள் எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் உடன் பேமெண்ட்களை பின்தொடர்வது எளிது; வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கணினி மூலம் உருவாக்கப்பட்ட பேமெண்ட் இணைப்புடன் கூடிய மின்னஞ்சல்/எஸ்.எம்.எஸ் விலைப்பட்டியல்களை அனுப்ப முடியும். இது பேமெண்டுகளை கண்காணிக்க அல்லது பெறாத பேமெண்ட்கள் குறித்து ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளில் இருந்து நேரத்தை மிச்சப்படுத்தும்.

ரீஃபண்ட் நிர்வகித்தல் பேமெண்ட் திருப்பியளித்தல் எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் மூலம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் வரவு வைக்கப்படுகிறது. இம்முறையில், அனைத்து ரீஃபண்ட் /வரவுகளை நீங்கள் எளிதாகக் கண்காணிக்கலாம் மற்றும் கணக்கிணக்கமும் எளிதாகிறது.

பேமெண்ட் ஃபாலோ-அப்ஸ் பேமெண்ட் சார்ந்து வாடிக்கையாளரைப் கண்கானிப்பது கடினமான பணிகளில் ஒன்று. இந்த டிஜிட்டல் பேமெண்ட் தீர்வுடன், பேமெண்ட் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களை எளிதாக அடையாளம் காண முடியும் மற்றும் உடனடியாக சில கிளிக்களுடன் பலவகை பேமெண்ட் நினைவூட்டல்களை அனுப்ப முடியும்.

உங்கள் அன்றாட வணிக பணிகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் வழிமுறைகளை ஏற்றுக்கொள்வது உங்கள் வணிகத்தின் செயல்திறனை மட்டுமல்லாமல், இத் தொழில்நுட்பத்தின் திறனால் உங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வெல்ல முடியும். எனவே, இன்றே எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப்-க்கு பதிவு செய்யுங்கள் மற்றும் கணக்கிணக்கக் குழப்பங்களுக்கு விடை கொடுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்

மேலும் படிக்கவும்

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

மேலும் படிக்கவும்

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்