தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாட்டின் எஸ்.எம்.இ துறையை கணிசமான அளவில் மாற்றியுள்ளது என்றாலும், தொழில்நுட்பப் பெயர்ச்சிக்கு ஏற்ப மாறுவது சிறிய அளவிலான விற்பனையாளர்களுக்கு, குறிப்பாக சில்லறை வணிகத் துறையைச் சார்ந்தவர்களுக்கு எளிதானது அல்ல. உதாரணமாக, பணமில்லா பேமெண்ட் முறைகளுக்கு மாறுவது சிறிய நகரங்களில் உள்ள விற்பனையாளர்கள் அல்லது ஒப்பீட்டளவில் குறுகிய அளவில் செயல்படும் நபர்களுக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும். ஆனால், நேரடியாக வருவதை குறைப்பதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து வணிகத்தை அதிக டிஜிட்டல் முறைகளை நோக்கி மாற்றும் இந்த 'புதிய இயல்புமுறை' இக்காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று.
வசதி, பாதுகாப்பு, வேகம் மற்றும் செயல்திறன் போன்ற பல நன்மைகளை டிஜிட்டல் பேமெண்ட் முறை வழங்குகிறது. மேலும், எச்.டி.எஃப்.சி வங்கியின் ஸ்மார்ட்ஹப் போன்ற தளங்களுடன், டிஜிட்டல் பாதையை ஏற்றுக்கொள்வது இப்போது முன்பை விட எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. அனைத்து வகையான சில்லறை விற்பனையாளர்களுக்கும், பல்வேறு தொழிற்துறைகளுக்கும் ஏற்ற டிஜிட்டல் பணம் செலுத்தல் மற்றும் மேலாண்மைத் தீர்வுகளை ஸ்மார்ட்ஹப் வழங்குகிறது.
ஸ்மார்ட்ஹப் உடன் பயணிப்பதன் முக்கிய நன்மைகளும், அது எவ்வாறு உங்கள் வணிக வளர்ச்சிக்கு பங்களிக்கிறது எனும் தகவல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
விரைவான க்யூ மேலாண்மை ஒரு பரபரப்பு மிகுந்த நாளில் கூட நீங்கள் நூற்றுக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறும்போது, பில் நகலை அச்சிடுதல், ரொக்கப் பணம் பெறுதல் மற்றும் வாடிக்கையாளர்க்கு மீதிப்பணம் வழங்குதல் என பல செயல்பாடுகள் உண்டு. இது சில நேரங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம், நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், பிழைகள் ஏற்படவும் வழிவகுக்கும். ஸ்மார்ட்ஹப் போன்ற டிஜிட்டல் தளத்திற்கு மாறுவது விரைவான பில்லிங் மற்றும் பணம் செலுத்தலை உறுதி செய்து கவுண்டரில் க்யூ விரைவாக நகர வழிவகுக்கிறது. அதோடு, தவறான பணம் செலுத்தல்களுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
தொடர்பில்லா மற்றும் வசதியான முறை நெரிசலான இடங்களில் இருந்து விலகி இருந்து கூடிய அளவு குறைவான தொடர்புகளைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், ரொக்கப் பணத்தைக் கொண்டு ஷாப்பிங் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முயற்சி செய்கின்றனர். டிஜிட்டல் பணம் செலுத்தல் முறைகளால் சாத்தியமான பணமில்லா பரிவர்த்தனைகள், உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பில்லா நிலையையும் முழுமையான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றது. ஸ்மார்ட்ஹப் போன்ற தளங்கள் பலவகைகளில் பணம் செலுத்தல் முறைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை உள்ளடக்கியுள்ளன - ஸ்கேன் அண்டு பே, டேப் அண்டு பே, (மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரம் பி.ஓ.எஸ்), வயர்லெஸ் கார்டு ஸ்வைப், ஆன்லைன் பணம் செலுத்தல் முறைகள் (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங்) மற்றும் யூ.பி.ஐ (பேஸாப்) இந்த பணம் செலுத்தல் தேர்வுகள் அனைத்தும் வணிகரின் பில்லிங் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து எளிதான கணக்கிணக்கத்திற்கு வழிவகுப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான முறையில் செலுத்தும் நெகிழ்வுத்தன்மையும் வழங்குகிறது.
பணம் வசூலிக்க எளிதான பின்தொடர்தல் விற்பனையாளர்கள் அல்லது பங்குதாரர்களுக்கு இமெயில்/ எஸ்.எம்.எஸ் மூலம் பணம் செலுத்தல் இணைப்புகளுடன் கூடிய விலைப்பட்டியலை அனுப்புவதன் மூலம் கண்காணித்தல் மற்றும் ரெக்கார்டு கீப்பிங் பணிகளை எளிதாக்க ஸ்மார்ட்ஹப் போன்ற நவீன பணம் செலுத்தல் தளங்கள் உதவுகின்றன. இம்முறையில், பெற வேண்டிய பணம் செலுத்தல்களை நேரடியாகப் பின்தொடர்வதைப் பெருமளவில் குறைக்க முடியும். தாமதத்திற்கான ஆதாரம், செலுத்தப்படாத பேமெண்ட் போன்றவற்றை எதிர்கால உபயோகத்திற்காக ஆவணப்படுத்தவும் முடியும்.
4. எளிமையான ரீஃபண்ட் எளிதான கேட்வே மேலாண்மை, பரிவர்த்தனை ஆய்வுகள் மற்றும் திரும்பி வந்த பொருட்கள் அல்லது தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் மீதான எளிதான ரீஃபண்ட் போன்ற அம்சங்களோடு பரிவர்த்தனைகளைச் சீராகச் செயல்படுத்த ஸ்மார்ட்ஹப் உதவுகிறது. இம்முறையில் கணக்கிணக்கம் சார்ந்து சவால்களை நீங்கள் இனி எதிர்கொள்ள வேண்டியதில்லை.
5. கடையில் மற்றும் ஆன்லைனில் சிறப்பான ஆர்டர் மேலாண்மை உலகமே விரல் நுனியில் கட்டுப்படுத்தப்படும் இக்காலகட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்ந்தெடுத்திருப்பதால், உங்கள் வணிகத்தை ஆன்லைனில் எடுத்துச் செல்வது, இப்போது அவசியத் தேவையாக மாறியுள்ளது. கடையில் மற்றும் ஆன்லைனில் சிறப்பான ஆர்டர் மேலாண்மைக்கு வழிவகுத்து, பெறப்பட்ட ஆர்டர்களைக் கண்காணித்தல், பணம் செலுத்தல் நிலையை சரிபார்த்தல், பிற விவரங்களை அறிதல் போன்ற பணிகளை சில கிளிக்குகளில் மேற்கொள்ள ஸ்மார்ட்ஹப் மிகவும் உதவியாக உள்ளது.
உலகமே விரல் நுனியில் கட்டுப்படுத்தப்படும் இக்காலகட்டத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்ந்தெடுத்திருப்பதால், உங்கள் வணிகத்தை ஆன்லைனில் எடுத்துச் செல்வது, இப்போது அவசியத் தேவையாக மாறியுள்ளது. கடையில் மற்றும் ஆன்லைனில் சிறப்பான ஆர்டர் மேலாண்மைக்கு வழிவகுத்து, பெறப்பட்ட ஆர்டர்களைக் கண்காணித்தல், பணம் செலுத்தல் நிலையை சரிபார்த்தல், பிற விவரங்களை அறிதல் போன்ற பணிகளை சில கிளிக்குகளில் மேற்கொள்ள ஸ்மார்ட்ஹப் மிகவும் உதவியாக உள்ளது.
நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்
மேலும் படிக்கவும்உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.
மேலும் படிக்கவும்உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.
மேலும் படிக்கவும்