வலைப்பதிவு

பின்னர் செலுத்துக அம்சத்தை மளிகைக் கடைகளுக்கு ஏற்ப அமைப்பது எப்படி?

கிரானா ஸ்டோர்களுக்கான பின்னர் செலுத்துக அம்சத்தை எவ்வாறு அமைப்பது

உங்களைப் போன்ற பெரும்பாலான மளிகைக் கடைக்காரர்கள் (கிரானாக்கள்) சரக்கு மற்றும் பல வாடிக்கையாளர்களைக் கையாளுகின்றன. உங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் போன் அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் வழியாக ஒவ்வொரு நிமிடமும் ஆர்டர்களைச் சமர்ப்பிக்கின்றனர். உங்கள் பில்லிங் முறையை ஆன்லைனுக்கு மேம்படுத்துவது குறித்து கருதியதுண்டா? நீங்கள் ஒன்று அல்லது பல மளிகை கடைகளை வைத்திருந்தால், உங்கள் கடை அல்லது கடைகளை சிறப்பாக நிர்வகிக்க ஸ்மார்ட்ஹப் குரோசரி உங்களுக்குத் தேவை.

ஸ்மார்ட்ஹப் குரோசரியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நீங்கள் மளிகை பொருள் வாங்கியதற்கு பின்னர் பணம் செலுத்தும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். கடன் கணக்கு என்பதுதான் கிரானா என்றும் காத்தா என்று அழைக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஹப் குரோசரி இரண்டு வகைகளில் கிடைக்கிறது; பி.ஓ.எஸ் அடிப்படையிலான தீர்வு மற்றும் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ற ஆப் அடிப்படையிலான தீர்வு.

ஸ்மார்ட் ஹப்-இன் உதவியோடு பின்னர் செலுத்துக அம்சத்தை எவ்வாறு அமைப்பது என்பதைப் பற்றி மேலும் அறிவோம்.

  • வாடிக்கையாளருக்கான விலைப்பட்டியலை உருவாக்கியவுடன், அச்சிட அல்லது வாடிக்கையாளர் டேபில் சேர்க்க என பல விருப்பத் தேர்வுகள் உள்ளன.
  • வாடிக்கையாளர் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு அந்த வாடிக்கையாளர் பரிவர்த்தனைக்கு ஒரு கணக்கு அல்லது கடன் கணக்கை உருவாக்கவும்.
  • பதிவுச் செயல்முறை முடிந்ததும், வாடிக்கையாளரின் கணக்கு உருவாக்கப்படுகிறது.
  • இந்த வாடிக்கையாளரின் பெயரின் கீழ் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்போதும், அது பின்னர் செலுத்துக கணக்கில் பதியப்படுகிறது

நிலுவைத் தொகை, செலுத்தப்பட்ட தொகை, முழுமையான சுருக்கவுரை மற்றும் அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்ட இ-வாலட்கள் ஆகியவற்றை நீங்கள் காண்பதற்கு ஸ்மார்ட்ஹப் உதவுகிறது.

பரிவர்த்தனை வகையைப் பொறுத்து, அவற்றைத் திருத்தலாம் அல்லது வாடிக்கையாளருக்கு நினைவூட்டல் அனுப்பலாம். வாடிக்கையாளர் தங்கள் மொபைல் எண்ணில் ஒரு எஸ்.எம்.எஸ்-ஐ பெறுவார்கள்.

பின்னர் செலுத்துக பரிவர்த்தனையை முடிப்பதற்கு, வாடிக்கையாளர் பெயர் அல்லது மொபைல் எண் மூலம் அதனைத் தேடலாம். 'தொகையை செட்டில் செய்க' என்பதைத் தேர்வு செய்து முழுத் தொகை அல்லது பகுதித் தொகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொகையை உள்ளிட்டு, பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்யவும். இறுதியாக, ஒரு பேமெண்ட் லிங்க் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது. ஒருங்கிணைந்த டாஷ்போர்டில் அனைத்து பணம் செலுத்தல்களையும் கடன் நிலுவைகளையும் காணலாம்.

உங்கள் பேமெண்ட்கள் மற்றும் சரக்கு மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மைக்கான முழுமையான ஆன்லைன் கண்காணிப்பு அமைப்புடன், கடினமான பணிகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் வணிகத்தின் பலன்களை அனுபவியுங்கள். சில எளிய படிகளில், பின்னர் செலுத்துக அம்சத்தை எவ்வாறு அமைப்பது என்பது பற்றிய உங்கள் கேள்விக்கான அனைத்து பதிலும் கிடைக்கிறது. எனவே நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இன்றே குரோசரிக்கான ஸ்மார்ட்ஹப்-க்கு பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்

மேலும் படிக்கவும்

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

மேலும் படிக்கவும்

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்