வலைப்பதிவு

தானியங்கு பணம் செலுத்தல் முறை எவ்விதத்தில் உங்கள் வணிகத்தை வளர்க்க உதவுகிறது

தானியங்கு பணம் செலுத்தல் முறை எவ்விதத்தில் வணிகத்தை வளர்க்க உதவுகிறது

சமீபத்திய காலங்களில், ஆன்லைனில் வர்த்தகத்தை மேற்கொள்வது வணிக அமைப்பு மேலும் வளர்ச்சி பெற உதவும் மிகவும் பயனுள்ள வழியாகும். குறிப்பாக, பில்கள் மற்றும் கணக்கிணக்கம், சரக்கிருப்புப் பதிவுகள் மற்றும் பேமெண்ட் ஆகியவற்றை கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் கண்காணிப்பது போன்ற பல பணிகளை உள்ளடக்கிய நிதி மேலாண்மைக்கு டிஜிட்டல் முறை முகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு சிறிய பிழை கூட இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இங்குதான் தொழில்நுட்பத்தின் திறன் உங்களுக்கு உதவுகிறது.

டிஜிட்டல் பணம் செலுத்தல் தீர்வைத் தேர்வு செய்வது உற்பத்தித்திறன் மற்றும் வருவாயை அதிகரிக்கும் அனைத்து வகையான மற்றும் பல அளவுகளிலான வணிக அமைப்புகளுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் பணம் செலுத்தல் தீர்வை வழங்க வடிவமைக்கப்பட்ட நவீன ஆன்லைன் தளமே எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப். அதன் பாதுகாப்பான மற்றும் எளிதாக உபயோகிக்கவல்ல அம்சங்கள் பில்லிங் மற்றும் பணம் செலுத்தல் முறைகளை எளிதாகவும், விரைவானதாகவும் மாற்றும். எச்.டி.எஃப்.சி வங்கியின் ஸ்மார்ட்ஹப் வணிகத்தை விரிவாக்க எவ்விதத்தில் உதவுகிறது என்பதைப் பற்றிய விரிவான பார்வை இங்கே.

ஸ்மார்ட்ஹப் மூலம் வணிகத்தை மேலாண்மை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இது உங்கள் வணிகத்தின் வளர்ச்சியில் எவ்வாறு பங்களிக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கீழே:

தானியங்கு கணக்கிணக்கம்: உங்கள் வழக்கமான வாடிக்கையாளர்களில் பலர் கடன் முறையைப் பின்பற்றக்கூடும். அத்தகைய ஏற்பாடு வாடிக்கையாளர் விசுவாசத்தை அதிகரிக்க உதவும் என்றாலும், பேமெண்ட் மற்றும் நிலுவைத் தொகை கண்காணிப்பு மற்றும் கணக்கிணக்கத்திற்கு மாத இறுதியில் அதிக அவகாசம் தேவைப்படலாம். எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் உடன் இந்தச் செயல்முறை தானாகவே பில்களை இணக்கம் செய்து செலவுகளைக் கணக்கிடுகிறது. இது தவிர, ஒரே டாஷ்போர்டில், ஒருங்கிணைந்த முறையில் பற்று மற்றும் வரவு வைக்கப்படும் தொகைகளை நேர் செய்கிறது.

தொடர் பேமெண்ட்கள் மற்றும் இ.எம்.ஐ வசூல்: வணிக உரிமையாளராக, ஒவ்வொரு மாத இறுதியிலும் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பல பேமெண்ட்கள் அல்லது இ.எம்.ஐ-களை வசூலிக்க வேண்டியிருக்கும். இவை குறித்த கணக்கைப் பராமரிப்பது சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒருங்கிணைந்த அறிக்கைகள், எளிதான கோப்புப் பதிவேற்றம் மற்றும் பேமெண்ட்டை வெவ்வேறு தலைப்புகளில் பிரிக்கும் தேர்வு, தொடர் பேமெண்ட்கள் மற்றும் இ.எம்.ஐ-களை தானியங்கு முறையில் வசூலிப்பது போன்ற எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் அம்சங்கள் இச்செயல்முறையை எளிதாக்குகிறது. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை இந்த அமைப்பில் உள்ளிடுவது மட்டுமே நீங்கள் செய்யவேண்டிய பணி. அதன் பிறகு நியமிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட தொகை அல்லது தவணைகளை நீங்கள் தானாகவே வசூலிக்க முடியும். இதுவரை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக சோதித்து நீங்கள் மேற்கொண்டிருந்த பணியை இது முழுமையாகக் குறைக்கிறது.

ஒருங்கிணைந்த அறிக்கைகள்: ஒருங்கிணைந்த அறிக்கைகளைக் காண்பிக்கும் அர்ப்பணிப்புள்ள பில்லிங் மேலாண்மைக் கருவியுடன், நீங்கள் வருவாயை உடனடியாகவும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் மதிப்பாய்வு செய்யலாம். காலம் கடந்த தொகைகள், தொடர் பேமெண்ட்கள் மற்றும் பல தனிப்பட்ட அறிக்கைகளை நீங்கள் பிரிண்ட் செய்யலாம் அல்லது தேவைப்பட்டால் அதன் ஒருங்கிணைந்த அறிக்கையையும் காணலாம். இது ஆதாரங்களை ஆவணப்படுத்தவும், உங்கள் வருவாய் சார்ந்த பதிவுகளைப் பராமரிக்கவும் உதவுகிறது. இது பணம் செலுத்தலை நெறிப்படுத்தவும் உதவுகிறது.

ஒருங்கிணைந்த பில்லிங் அமைப்புகள்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இப்போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த விரும்புகிறார்கள். உங்கள் விற்பனையாளர்கள், சப்ளையர்கள், விநியோக பார்ட்னர்கள் மற்றும் பிற வணிக செலவினங்களுடன் பில்களை தீர்க்கும்போதுகூட, டிஜிட்டல் பேமெண்ட்கள் மிகவும் திறமையானவை மற்றும் கண்காணிக்க எளிதானவை. எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் உடன், உங்கள் வணிக அமைப்பில் டிஜிட்டல் பணம் செலுத்தல்கள் முறைகளை எளிதாக இணைத்து க்யூ.ஆர் குறியீடு ஸ்கேன் அண்டு பே, டேப் அண்டு பே (மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரம் பி.ஓ.எஸ்), வயர்லஸ் கார்டு ஸ்வைப், ஆன்லைன் பணம் செலுத்தல்கள் (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங்) மற்றும் யூ.பி.ஐ (எச்.டி.எஃப்.சி வங்கி பேஸாப்)-முறைகளோடு பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

கடன் பெறுதல் உள்ளக பில்லிங் செயல்பாடுகளை நிர்வகிப்பதோடு, கூடுதல் வணிகத் தேவைகளுக்குத தேவையான கடன் பெறவும் இந்த டிஜிட்டல் பணம் செலுத்தல் தீர்வை நீங்கள் பயன்படுத்தலாம். கடனுக்காக விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது மற்றும் சில படிகளைப் பின்பற்றி அவற்றை மேற்கொள்ளலாம்.

  • உங்கள் தகுதி வரம்பைச் சோதிக்கவும்
  • கடன் தொகையைத் தேர்வுசெய்க
  • எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கவும்.

இம்முறையில், நிதி உதவி வழங்குவதைத் தீர்மானிப்பதில் பின்பற்றப்படும் நீண்ட செயல்முறையை நீங்கள் தவிர்க்கலாம்.

உங்கள் வணிகத்தை விரிவாக்க, டிஜிட்டல் செயல்பாடுகளை ஏற்பது முதல் படியாகும். எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் போன்ற பணம் செலுத்தல் தீர்வுகளுடன், தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள் உங்கள் அன்றாட மேலாண்மை பணிகளை கவனித்துக் கொள்ள அனுமதித்து உங்கள் வருவாயை வளர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதில் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் உபயோகிக்கலாம். தாமாகவே கணக்கீடுகள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் பில்லிங் மேலாண்மை தவிர, இந்த கட்டண தீர்வு வேறு பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் அறிய, இப்போதே வலைத்தளத்தை பார்வையிடவும்!

தொடர்புடைய கட்டுரைகள்

நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்

மேலும் படிக்கவும்

உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.

மேலும் படிக்கவும்

உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.

மேலும் படிக்கவும்


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்