உங்களது கடையின் பணம் செலுத்தும் முறைகளை சரியாக நிர்வகிக்க விரும்புகிறீர்களா? எங்களிடம் உங்கள் கேள்விக்கான விடை உள்ளது.
உங்கள் வணிகத்திற்கு ஸ்மார்ட்ஹப் சிறந்த துணை. உங்களது ஒவ்வொரு வணிகத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பணத்தை விரைவாகப் பெறுவது பற்றிய கேள்விக்குக் கூட எங்கள் ஸ்மார்ட்ஹப் தீர்வுகள் விடையளிக்கின்றன.
இந்தக் கட்டுரையின் மூலம், ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பணத்தை ஏற்றுக்கொள்வதற்கான வெவ்வேறு வழிகளை உங்களுக்கு உணர்த்துவோம். ஸ்மார்ட்ஹப் மூலம் யாரிடமிருந்தும், எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் அல்லது செயலி வழியாக பணத்தைப் பெறலாம். இதை இங்கு விரிவாக விளக்குகிறோம்.
தொடங்குவதற்கு, உங்கள் வணிகத்தை ஸ்மார்ட்ஹப் உடன் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பலவிதமான மளிகை கடைகளை வைத்திருக்கும் தொழில்முனைவர், மருந்துக்கடை நடத்துபவர், ஒரு வெற்றிகரமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்துபவர் என எவராக இருந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் எளிதாக ஸ்மார்ட்ஹப்-ஐ பயன்படுத்தலாம். தளம் செயலில் வந்தவுடன், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பணம் செலுத்தும் பல தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வழங்கலாம்.
ஸ்மார்ட்ஹப் தளம் மூலம் பணம் பெறும் வழிமுறைகள்:
கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள்: வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்த விரும்பினால், ஸ்மார்ட்ஹப் தீர்வை உபயோகித்து ஸ்மார்ட்ஹப் பணம்செலுத்தும் கேட்வே மூலம் ஆன்லைனில் அல்லது தனிப்பட்ட விற்பனை பி.ஓ.எஸ் ( விற்பனை முனையம்) மூலம் ஆஃப்லைனில் பணம் பெறலாம்.
யூ.பி.ஐ: உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ஸ்மார்ட்ஹப் ஆப்-ஐ பயன்படுத்தி, யூ.பி.ஐ மூலம் ஆன்லைனில் பணத்தை பெறலாம். ஒரு தனித்துவமான யூ.பி.ஐ ஐ.டி-ஐ பயன்படுத்தி நிதி பரிமாற்றப்படுகிறது. கூகுள்பே, மொபிக்விக், பேடிஎம், போன்பே, அல்லது பாரத்பே மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த முடியும்.
பீம் ஆப்: பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி- பீம் ஆப் என்பது நிதி பரிமாற்றத்திற்கென இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் நேரடியான பயன்பாட்டு இடைமுகம் ஆகும்.
க்யூ.ஆர் குறியீடு: ஸ்மார்ட்ஹப்பின் மூலம் எவ்வாறு பணம் பெறுவது என்பதற்கான மற்றொரு எளிய வழிமுறை க்யூ.ஆர் குறியீடு மற்றும் பாரத் க்யூ.ஆர் குறியீடு உபயோகிக்கும் முறையாகும். வணிகரின் குறியீட்டை ஸ்கேன் செய்து தொகையைச் சேர்த்து வாடிக்கையாளர் பணம் செலுத்தலாம். பணம் பெறப்பட்டவுடன், வாடிக்கையாளருக்கும் உங்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.
எஸ்.எம்.எஸ்பே: பணம் பெற மற்றொரு எளிதான வழி எஸ்.எம்.எஸ்.பே மூலம் பணம் பெறுவது. இதில் ஒரு கட்டண இணைப்பு வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பப்படும்; அவர்கள் இணைப்பைக் கிளிக் செய்து, விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். வாடிக்கையாளர் தொலைவிலிருந்தே பணம் செலுத்த முடியும், வணிகர் என்ற முறையில் நீங்கள் அதைப் பெறலாம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி வழங்கும் வணிகங்களுக்கு இந்த பணம் செலுத்தும் முறை ஏற்றது.
பேஸாப்: எச்.டி.எஃப்.சி வங்கி ஆப், பேஸாப் மூலம் ஆன்லைனில் பணம் பெறும். வாடிக்கையாளர்கள் தங்கள் பேஸாப் வாலட் மூலம் பணம் செலுத்த ஸ்மார்ட்ஹப் உதவுகிறது, மேலும் நிதி நேரடியாக வணிகரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஆதார் பே: வணிகர்கள் வாடிக்கையாளரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் பே மூலம் ஆன்லைனில் பணத்தைப் பெற ஸ்மார்ட்ஹப் உதவுகிறது.
கடையில் உபயோகிக்கப்படும் பி.ஓ.எஸ் முனைய தீர்வுகளையும் டிஜிபி.ஓ.எஸ் மூலம் ஸ்மார்ட்ஹப் வழங்குகிறது. ஜி.பி.ஆர்.எஸ் வசதியுடன் கூடிய மொபைல் ஃபோனில் கார்டுகளை ஸ்வைப் செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வயர்லெஸ் கார்டு ஸ்வைப் இயந்திரம் (ஜி.பி.ஆர்.எஸ்) வழங்குகிறது. எம்.பி.ஓ.எஸ் - மொபைல் கார்டு ஸ்வைப் இயந்திரம் பி.ஓ.எஸ், வணிகரின் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லெட் மூலம் கேஷ் ரெஜிஸ்டர் அல்லது மின்னணு விற்பனை முனையம் போல பணியாற்றும் மொபைல் விற்பனை முனையம்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பணம் வசூலிக்க உள்ள பல வழிகளோடு, ஸ்மார்ட்ஹப் உங்கள் வணிகத்தை மேம்படுத்தி எளிதாகப் பணம் பெற உதவும் ஒரு சிறந்த தளமாகும். எனவே நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இன்றே உங்கள் வணிகத்திற்காக ஸ்மார்ட்ஹப்-ஐ பெறுங்கள்; ஸ்மார்ட்ஹப் அதன் பணியை சிறப்பாக நிறைவேற்றும், நீங்கள் லாபம் ஈட்டும் வழிகளை மேம்படுத்துவதில் கவனம் காட்டுங்கள்.
நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய எச்.டி.எஃப்.சி வங்கி பி.ஓ.எஸ் முனையங்களின் 5 அம்சங்கள்
மேலும் படிக்கவும்உங்கள் தயாரிப்பு விவரப்பட்டியல் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகளை 5 எளிதான படிகளின் உதவியோடு உடனடியாக உருவாக்கிப் பகிருங்கள்.
மேலும் படிக்கவும்உங்கள் வணிக நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குதல் எளிதானது மற்றும் ஒளிவு மறைவு இல்லாதது.
மேலும் படிக்கவும்