ஒரு முனையம், பல அம்சங்கள், அதுதான் எச்.டி.எஃப்.சி உங்களுக்கு வழங்கும் சிறப்பான வணிகத் தீர்வுகள் உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் மிகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளும் திறன் கொண்ட, பேமெண்ட் முறைகளின் பரந்த வரம்பை ஆதரிக்கும் டிஜிபி.ஓ.எஸ் இயந்திரங்களை உங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம். வாடிக்கையாளர்களிடமிருந்து உங்கள் கடையில் அல்லது தொலைவிலிருந்து எவ்வித சிரமமும் இன்றி பேமெண்ட் பெறுங்கள்
பி.ஓ.எஸ் இயந்திரங்கள் இரண்டு வகைகளில் கிடைக்கின்றன, மேலும் பல அம்சங்களோடு வருகின்றன. ஊடாடும் இடைமுகம் மற்றும் விரைவான இணைப்பு கொண்ட நவீன கால முனையங்கள் அல்லது குறைந்த விலை கொண்ட முனையங்கள் இவற்றில் இருந்து தேர்வு செய்யலாம். இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
உங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி வணிகக் கணக்கை துவக்கியபின், உங்கள் ஸ்மார்ட்ஹப் தீர்வுக் கணக்கை அமைக்க உங்கள் வங்கிப் பிரதிநிதியிடம் கேளுங்கள் அல்லது எங்கள் நிர்வாகி உங்களைத் தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
கார்டு ஸ்வைப் இயந்திரம் உங்கள் டெபிட் & கிரெடிட் கார்டுகள் தட்டவும், டிப் செய்யவும் அல்லது ஸ்வைப் செய்யவும் அல்லது டிஜி.பி.ஓ.எஸ் டெர்மினல் மூலம் பல்வேறு கட்டண தளங்களைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்யவும் வணிகரை அனுமதிக்கிறது. பண செலுத்துவதைத் தவிர அனைத்து கட்டண முறைகளுக்கும் இது ஒரு இயந்திரம்.
டிஜி.பி.ஓ.எஸ் இயந்திரம் வயர்லெஸ் ஆகும், இதனால் இதற்கு அதிக வேக வைஃபை இணைப்பு தேவை. கூடுதலாக, சாதனத்தின் செயல்பாட்டிற்கு சிம் கார்டைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பி. ஓ.எஸ் அல்லது இ.டி.சி இயந்திரத்திற்கான பல்வேறு கட்டணங்களைக் காண, இங்கே கிளிக் செய்யவும்.